For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பணத்துக்கு ஆசைப்பட்டு துபாய் போன பெண்..!! மசாஜ் சென்டரில் வைத்து பலாத்காரம்..!! கண்களில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை..!!

They sprinkled chilli powder on their eyes, kicked them and tortured them. They also recorded a video of raping the woman.
02:36 PM Nov 07, 2024 IST | Chella
பணத்துக்கு ஆசைப்பட்டு துபாய் போன பெண்     மசாஜ் சென்டரில் வைத்து பலாத்காரம்     கண்களில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு 42 வயதாகிறது. இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துவிட்டார். தனது மகளுடன் சில ஆண்டுகள் தனியாக வசித்தார். பின்னர், மேல்பாலையை சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன்.

Advertisement

குடும்பம் வறுமையில் வாடவே, வீட்டு வேலைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த பெண் குவைத் சென்றுள்ளார். அங்கு ஒரு வீட்டில் குழந்தைகளை கவனிக்கும் வேலை பார்த்து வந்த நிலையில், கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர், துபாயில் உள்ள மசாஜ் சென்டரில் வேலை இருப்பதாக கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.

சம்பளம் அதிகமாக கிடைக்கும் என்ற ஆசையில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு மசாஜ் சென்டரில் வேலைக்கு சேர்ந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். நிர்வாகத்திடம் அந்த பெண் தகராறு செய்யவே தனி அறையில் அடைத்து வைத்து, கண்களில் மிளகாய் பொடி தூவி அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோவும் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, மனம் உடைந்து போன பெண் அங்கிருந்து சாதுர்யமாக தப்பி, தேவாலயம் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்த கன்னியாஸ்திரிகளிடம் தனது நிலையை எடுத்து கூறி கதறியுள்ளார். இதையடுத்து, அவர்களின் உதவியுடன், ஊருக்கு புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் வந்திறங்கியதும், மறு நிமிடமே திருவனந்தபுரம் எஸ்.பி. ஆபீசுக்கு சென்று தன்னை துபாயில் உள்ள மசாஜ் சென்டருக்கு வேலைக்கு அழைத்துச் சென்று இந்த கதிக்கு ஆளாக்கியதாக புகார் அளித்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, நேற்று காலை அருமனை வந்த பெண் உடனடியாக அருமனை காவல் நிலையத்துக்கு சென்று நடந்தவற்றை கூறி புகாரளித்தார். அவர் கதையை கேட்ட போலீசார், அவருக்கு ஆறுதல் கூறி உணவு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினர். அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவரை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ”வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன் காக்க அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை உருவாக்கப்பட்டு, புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

Read More : தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்..? எப்போது தெரியுமா..? அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் தேர்தல் ஆணையம்..!!

Tags :
Advertisement