என்னது பறக்கும் கேமரா ஸ்மார்ட்போனா?.. விவோ-வின் புதிய அறிமுகம்
விவோ நிறுவனம் விரைவில் பறக்கும் கேமரா அம்சம் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய பறக்கும் கேமரா ஸ்மார்ட்போனின், ப்ரோட்டோடைப் மாடலை விவோ இப்போது வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
பிரத்தியேகமான மற்றும் சிறப்பான கேமரா அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமைக்குரிய விவோ நிறுவனம், இப்போது யாரும் எதிர்பார்த்திடாத வகையில், புதிதாக பறக்கும் கேமராவை ஸ்மார்ட்போனுடன் இணைத்துள்ளது.
சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில் வருவது போன்ற ஹைடெக்கான அமைப்பை இந்த பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் இரண்டு பகுதிகளாக பிரியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நான்கு வருட நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வெற்றிகரமாக போனில் இருந்து பிரிந்து செயல்படும் ஒரு பறக்கும் கேமராவை விவோ இப்போது உருவாக்கியுள்ளது. இதேபோல், மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் களமிறங்கின என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், எந்த நிறுவனத்தாலும் இத்தகைய வெற்றிகரமான ப்ரோட்டோடைப் சாதனத்தை உருவாக்க முடியவில்லை என்பதே உண்மையாகும். உலகமே திரும்பி பார்க்கும் வகையில் விவோ நிறுவனம் மட்டும் இதை சாத்தியமாக்கியுள்ளது.
பறக்கும் பொழுது பொருள் அல்லது மனிதர்கள் மீது மோதாமல் இருக்க ஆட்டோமேட்டிக் டிடெக்ஷன் அம்சமும் இதில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மினி டிரோன் எவ்வளவு நேர பயன்பாட்டை வழங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், இது திறம்பட செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவோ பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் சாதனம் $1000 டாலருக்கு மேல் விலை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்னும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு 2027ல் வெளிவரலாம் எனவும் கூறப்படுகிறது.