அதிர்ச்சி சம்பவம்: சீனாவிற்கு சொந்தமான ஆலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து.! 13 பேர் பலி; 12 பேர் கவலைக்கிடம்.!
நிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த வெடி விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் சம்பவ இடத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற தொழிற்சாலை விபத்துகளில் இது மிக பயங்கரமான விபத்தாக பார்க்கப்படுகிறது.
இந்தோனேஷிய நாட்டில் சிலோவெசி தீவில் அமைந்துள்ள மிகப்பெரிய நிக்கல் தொழிற்சாலையில் தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. உலோகங்களை உருக்கும் பர்னன்ஸ் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி பார்த்துக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இந்தக் கொடூர விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 12 பேர் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உயிரிழந்தவர்களில் 5 பேர் சீனாவை சார்ந்தவர்கள் என்றும் 8 பேர் இந்தோனேஷியாவைச் சார்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிக்கல் தொழிற்சாலை சீனாவால் வாங்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொடூர விபத்து தொடர்பாக தீவிரமான விசாரணை நடத்தப்படும் என இந்தோனேசியா அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீயை அணைக்க 4 மணி நேரம் போராடி இருக்கிறார்கள். இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.