துர்கா பூஜைக்கு சென்ற பெண் தன்னார்வலர்!. பரிசு கொடுப்பதாகக் கூறி வன்கொடுமை செய்த போலீஸ்!. கொல்கத்தாவில் அதிர்ச்சி!
Kolkata: கொல்கத்தாவில் துர்கா பூஜைக்கு சென்ற பெண் தன்னார்வலரை, பரிசுக் கொடுப்பதாக கூறி காவல் உதவி ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் பெண் ஒருவர் குடிமை தன்னார்வத் தொண்டராக நியமிக்கப்பட்டு தற்போதுவரை பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 5ம் தேதி துர்கா பூஜை நடைபெற்றது. அதில் காவலர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதையடுத்து அப்பெண், காவல் நிலையத்தின் நான்காவது மாடியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர்,அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அதாவது, "துர்கா பூஜைக்கு ஆடைகளை பரிசாகக் கொடுப்பதாகக் கூறி, போலீஸ்காரர் அப்பெண்ணை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் தனது புகாரை ஏற்க மறுத்ததால், லால்பஜாரில் உள்ள கொல்கத்தா காவல்துறை தலைமையகத்திற்கும், டிசி சவுத் அலுவலகத்திற்கும் தனது புகாரை அனுப்பியதாக அந்தப் பெண் கூறினார்.
Readmore: அதிகாரியிடம் ரூ.55 லட்சம் மோசடி!. டிஜிட்டல் கைது என்றால் என்ன?. மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?.