For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பட்டப்பகலில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!

A female policeman in uniform was cut with a sickle in broad daylight..! Confusion in Kanchipuram..!
04:06 PM Jun 17, 2024 IST | Kathir
பட்டப்பகலில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு    காஞ்சிபுரத்தில் பரபரப்பு
Advertisement

காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது விஷ்ணு காஞ்சி காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக டில்லி ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இன்றைய தினம் டில்லி ராணி பணிமுடிந்துவிட்டு வீடு திரும்பும் நிலையில், பெரிய காஞ்சிபுரம் சாலை தெரு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், சீருடையில் இருந்த பெண் காவலர் டில்லி ராணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் பெண் காவலர் டில்லி ராணிக்கு கை பகுதியில் இரண்டு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

வெட்டுக்காயத்துடன் இருந்த டில்லி ராணியை அருகில் இருந்த மற்ற காவலர்கள், மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமணையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் காவலரை பட்டப்பகலில் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசரனை நடத்தி வருகின்றனர்.

Read More: லாட்ஜில் ரூம் போட்டு ஆசை தீர உல்லாசம்..!! ஐடியா கொடுத்த கள்ளக்காதலன்..!! ஆத்திரத்தில் கள்ளக்காதலி செய்த பகீர் சம்பவம்..!!

Tags :
Advertisement