முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்!

01:05 PM Apr 05, 2024 IST | Mari Thangam
Advertisement

பிரபல ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கார் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் திட்டங்களை ரத்து செய்ததை அடுத்து, பணியாளர்களில் 600 பேரை அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.

Advertisement

உலகின் தலைசிறந்த டெக் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள் நிறுவனம். பிப்ரவரி மாத இறுதியில், இந்த நிறுவனம் தனது இரு முன்னோடி முயற்சிகளையும் நிறுத்தத் தொடங்கியது. டெஸ்லாவுக்கு போட்டியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் கார் திட்டம், முதலீடு அதிகரிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டது. பொறியியல் சவால்கள், சப்ளையர்களின் ஒத்துழையாமை ஆகியவற்றால் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்ப்ளே திட்டத்தை மூடச் செய்தது.

அதனைத்தொடர்ந்து, இப்போது 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பது டெக் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாக கொண்ட ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய கார் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்ப்ளே திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவுகளின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கத்தை கையில் எடுத்துள்ளது. கலிபோர்னியா மாகாண வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறையிடம் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்த தரவுகளில் இருந்து இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பை முடித்தவர்களில் கனவுகளில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனத்தில் அதிரடியாக 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
apple production in indiaTermination of employees
Advertisement
Next Article