முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குடிபோதையில் கத்தியுடன் உலா வந்த ரவுடி..!! மடக்கி பிடித்த போலீஸ்..!! விசாரணையில் அதிர்ச்சி..!!

CCTV footage of the police arresting a drunken knife-wielding robber in Vannarappat has been released.
11:32 AM Jun 09, 2024 IST | Chella
Advertisement

வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடியை மடக்கி பிடித்த போலீசாரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Advertisement

சென்னை வண்ணாரப்பேட்டை MC ரோடு, GA ரோடு பகுதியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஜவுளி கடைகள், காலனி கடைகள் உள்ளன. சென்னை, திருவள்ளூர், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர்

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை G. A ரோடு பகுதியில் கையில் கத்தியுடன் ஒருவர் சுற்றி திரிவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார், கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை ‌‌கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவரை காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது பெயர் மணி என்பதும் இவன் மீது ஏற்கனவே, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்ட சம்பவம் நிகழ்ந்த நிலையில், மீண்டும் ரௌடி ஒருவர் கைது செய்யப்பட்டது வியாபாரிகளிடையை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Read More : யாருக்கெல்லாம் மத்திய அமைச்சர் பதவி..? சந்திரபாபு நாயுடு கட்சிக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு..? வெளியான லிஸ்ட்..!!

Tags :
CCTVChennaicrimejail
Advertisement
Next Article