மின் கணக்கீடு செய்யும் பணியில் வந்தது அதிரடி மாற்றம்..!! புதிய முன்னெடுப்பை எடுத்த மின்சார வாரியம்..!!
தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது மின்சார வாரியம் சோதனை முயற்சியில் ஒரு புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் வீடு, அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்யும் பணி தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை மீட்டரில் உள்ள எண்ணில் இருந்து கடந்த முறை கடைசியாக எடுத்த ரீடிங்கை கழிப்பார். அப்போது வரும் எண் தான் நாம் பயன்படுத்திய யூனிட்கள் ஆகும். அதன் அடிப்படையிலேயே, மின் கட்டணம் விதிப்பார்கள்.
இந்நிலையில், மின் பயன்பாட்டு கணக்கீட்டில் நடைபெறும் குளறுபடிகளை தடுக்கவும், நுகர்வோர்களுக்கு மின் கட்டண விவரத்தை உடனே தெரிவிக்கும் வகையிலும் மின் பயன்பாட்டு கணக்கெடுப்பு பணியை செல்போன் செயலி மூலம் மேற்கொள்ள தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பிரத்யேக செயலி ஒன்றையும் உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள் இந்த செயலியை டவுன்லோடு செய்து வீடுகளில் மின் அளவீடு பணியை செய்து வருகின்றனர்.
புளூடூத் கருவி மூலம் மீட்டர் கருவி மற்றும் செல்போன் இடையே இணைப்பை ஏற்படுத்தும். அதில் உள்ள அளவுகளை வைத்து ஒவ்வொரு வீடுகளின் மின் பயன்பாடுகளும் கணக்கிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மின் பயன்பாடு யூனிட் அளவீடுகளில் எந்தவித முறைகேடுகளும் குளறுபடிகளும் நடைபெறாது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மின் கட்டணத்தை அறியவும், செலுத்தவும் வாட்ஸ் அப் செயலியில் மின்சார வாரியம் அனுப்பி வருகிறது. இதை வைத்து மின் கட்டணத்தை செலுத்த முடியும். அதேபோல், மின் கட்டணம் ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் என்றால் அதை பணமாக பெறாமல் டிஜிட்டல் முறை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டணங்கள் தற்போது டிஜிட்டல் முறையிலும், செயலி வடிவிலும் வந்துவிட்ட நிலையில் மின் கட்டணமும் வந்துவிட்டது. ஆனால், மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு பணியை நடத்தினால் பல பயனாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதே நுகர்வோர்களின் கோரிக்கையாக உள்ளது.
Read More : சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி பலாத்காரம்..!! நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு..!!