பார்ட்டிக்கு வந்த நண்பர்களை படுக்க அழைத்ததால் விபரீதம்..!! திடீரென கேட்ட தாயின் அலறல் சத்தம்..!! கதவை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வருபவர் கீதா பூஷன். இவருக்கு வயது 70. இவருக்கு, 45 வயதில் ஜிதேந்திரா என்ற மகன் உள்ளார். இந்நிலையில், சில தினங்களாக இவர்களது வீடு திறக்கப்படாமலேயே இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, ஜிதேந்திராவும், அவரது தாய் கீதாவும் கேபிள் வயரால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர்களின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பல திடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
2025 புத்தாண்டைக் கொண்டாட, ஜிதேந்திரா தனது நண்பர்களான 19 வயது சுபம் நாராயணன் மற்றும் மங்கேஷ் ஆகியோரை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது, ஜிதேந்திராவின் வீட்டில் 3 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதையடுத்து, ஜிதேந்திரா தனது நண்பர்கள் இருவருடனுடம் உடலுறவு கொள்ள முயன்றார். இதனால் சுபம் நாராயணன், மங்கேஷ் ஆகியோர் ஆத்திரமடைந்தனர்.
ஜிதேந்திராவின் தொல்லை அதிகமானதால், கோபத்தின் உச்சிக்கு சென்ற இருவரும் ஜிதேந்திராவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இதை பார்த்த ஜிதேந்திராவின் தாய் அலறி துடித்துள்ளார். இதனால், கீதா பூஷனையும் கொலை செய்துவிட்டு பணம், நகை, செல்போன்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More : ஆரம்பமே அதிரப்போகுது..!! இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை..!! எதிர்க்கட்சிகளின் பிளான் என்ன..?