முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிமுகவில் பரபரப்பு...! முன்னாள் அமைச்சர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி ஆளுநரிடம் நேரடி கோரிக்கை...!

06:40 AM Dec 31, 2023 IST | 1newsnationuser2
Advertisement

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டுள்ளது தமிழக அரசு.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி; உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்து பேசினோம். 21 மசோதாக்கள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் 20 மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். ஒரு மசோதா மட்டும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.

Advertisement

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட கோப்புகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அனுமதி தர கோரினோம். அத்துடன், முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக 112 கோப்புகள் முதற்கட்டமாக ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. அதில் 68 பேரின் முன் விடுதலைக்கு அனுமதி அளித்து, 2 பேரின் விடுதலையை ரத்து செய்திருக்கிறார் ஆளுநர். இன்னும் 42 முன்விடுதலை கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.

இது தவிர, மேலும் 7 கோப்புகள் நீதிமன்றத்தில் உள்ளன. மொத்தமாக 49 முன்விடுதலை கோப்புகள் நிலுவையில் உள்ளன. 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனில் 4 உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். அதற்கான ஒப்புதலையும் கேட்டுள்ளோம். இந்த கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் மனுவாக கொடுத்துள்ளார் என கூறினார்.

Tags :
ADMKCorruption caseDmkLC veeramanirn raviVeeramani
Advertisement
Next Article