முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தீவிரமாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களுக்கு கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு..!!

A detailed report has been published on the rain prevention measures taken by the government in the delta districts.
09:41 AM Nov 26, 2024 IST | Mari Thangam
Advertisement

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் அரசு மேற்கொண்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பான அறிக்கையில், “தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிக்கையில் தெரிவித்தது.

தமிழக முதல்வர் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட, நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு ஜானி டாம் வர்கீஸ், (94999 56205, 88006 56753), மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கவிதா ராமு, (90032 97303), * திருவாரூர் மாவட்டத்திற்கு காயத்ரி கிருஷ்ணன், (73388 50002), * கடலூர் மாவட்டத்துக்கு எஸ்.எ. ராமன், இ.ஆ.ப., (94458 83226) ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.

தயார் நிலையில் மீட்பு பேரிடர் மீட்புப் படை.. மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இது தவிர, தேவைக்கேற்பட சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன. மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம், கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

புகார் தெரிவிக்க வேண்டிய எண் :

*மாநில அவசரகால செயல்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 வாட்ஸ் அப் 94458 69848

*மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்

*நாகப்பட்டினம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800-233-4233 வாட்ஸ் அப் 84386 69800

*மயிலாடுதுறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588

*திருவாரூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 வாட்ஸ் அப் 94885 47941

*கடலூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் 94899 30520

பொது மக்கள் TN Alert செயலி மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்

மேலும், கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறும், வெள்ள பாதிப்பு ஏற்படாத மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விவசாய பெருமக்கள், பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்போர் கனமழை எச்சரிக்கைக்கு ஏற்றவாறு தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்துமாறும் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! நவ.29ஆம் தேதியே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
tn governmentஉதவி எண்கள்காற்றழுத்த தாழ்வு மண்டலம்டெல்டா மாவட்டம்
Advertisement
Next Article