முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கொடூர தாய்!… தாலாட்டு பாடி குழந்தையை கொன்றேன்!… நாட்டையே உலுக்கிய சம்பவம் குறித்து பகீர் வாக்குமூலம்!

09:01 AM Jan 14, 2024 IST | 1newsnationuser3
Advertisement

கோவாவில் தனியார் ஹோட்டலில் 4 வயது மகனை கொலை செய்த சம்பவத்தில் தாய் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பெங்களூருவை சேர்ந்த 39 வயது பெண் தொழிலதிபர் சுசானா சேத். இவர், தனது 4 வயது மகனை கொலை செய்து சூட் கேஸில் உடலை மறைத்து வைத்து கோவாவில் இருந்து பெங்களூருவிற்கு கொண்டு சென்றுள்ளார். வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தாய் சுசானா சேத்தை கடந்த திங்களன்று கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணையில், தனது மகனை எப்படி கொலை செய்தார் என்பது குறித்தும், ஏன் இந்த கொலையை செய்தார் என்பது குறித்தும் சுசானா செத் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், தனது மகன் எங்கு, எப்படி படுத்திருந்தார் என்பதையும் தனது குழந்தையின் உடலை மறைத்து எடுத்தச்சென்ற பெட்டி எங்கு வைக்கப்பட்டிருந்தது என்பதையும் அதில் உடலை மறைத்து வைத்திருந்தது எப்படி என்பதையும் காண்பித்துள்ளார். மேலும், அவர் தனது குழந்தையை கொல்லும் போது, தாலாட்டு பாடியதாகவும் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

சுசானா தங்கியிருந்த அறையில் படிந்திருந்த ரத்தக்கரையை பார்த்த பிறகுதான், அந்த விடுதியில் உள்ள ஊழியர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதை வைத்துதான் போலீஸாருக்கு அவர்கள் தகவலையும் அளித்துள்ளனர். இந்த நிலையில், சுசானாவை கொலை நடந்த இடத்திற்கு சென்று என்ன நடந்தது என முழுமையாக தெரிந்து கொள்ள, போலீஸாருடன் தடவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர். சுசானா, தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்றும், இதனால் ஏற்பட்ட ரத்தக்கரையாக அந்த கரை இருக்கலாம் என்றும் தடவியல் நிபுணர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சுசானாவிற்கும் அவரது கணவர் வெங்கட் ராமனுக்கும் 2010ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். வெளிநாட்டில் தங்கியிருக்கும் வெங்கட் ராமன், குழந்தையை மட்டும் அவ்வப்போது வந்து பார்ப்பார் என கூறப்படுகிறது. இவர், முதற்கட்ட விசாரணையில் தனது முன்னாள் கனவரை பழிவாங்கும் நோக்கிலேயே தனது குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Goaகோவா சம்பவம்தாலாட்டு பாடி கொலை செய்தேன்பகீர் வாக்குமூலம்மகனை கொன்ற கொடூர தாய்
Advertisement
Next Article