மூதாதையர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட தம்பதி..!! டிஎன்ஏ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி முடிவு..!!
அடுத்த நொடி என்ன இருக்கிறது என்பதை அறியாத சுவாரஸ்யம் தான் வாழ்க்கை. ஒருவேளை அதனை அறிந்து கொண்டால் வாழ்வில் சுவாரஸ்யமே இருக்காது. அதேபோல், வாழ்வில் மறைந்திருக்கும் மர்மங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டால், வாழ்வில் வேடிக்கையும் இருக்காது. அதுமட்டுமின்றி வாழ்வதே கூட கடினமானதாக மாறிவிடும். அந்த வகையில், அமெரிக்காவின் கொலராடோவில் வாழும் ஒரு தம்பதியின் வாழ்க்கை இனி வாழ்வதே கடினமானதாக மாறியுள்ளது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட அந்த தம்பதி கடந்த 10 ஆண்டுகளாக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 3 குழந்தைகள். இப்படியான மகிழ்வான வாழ்வில் அந்த தம்பதி, விளையாட்டாக ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்தனர். பொதுவாக அந்நிய நாடுகளில் டி.என்.ஏ. பரிசோதனை என்பது எளிதாக மேற்கொள்ளும் வகையில் இருக்கிறது.
அதன் அடிப்படையில், அந்த தம்பதி தங்களின் மூதாதையர்களை பற்றி அறிந்துகொள்ள முடிவு செய்து டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்படி மேற்கொண்ட பரிசோதனையில் அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. பொதுவாக உறவு முறையில் மணம் முடிக்கும் போது அது தங்களின் குழந்தைகளின் வளர்ச்சியில் அறிவியல் பூர்வமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிலவி வருகிறது. இதனால், டி.என்.ஏ. முடிவைக் கண்டு அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இது பற்றி தங்கள் குழந்தைகளிடம் தெரிவிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலும் இருக்கின்றனர்.