For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேலை செய்யாத அபாய சங்கிலி..! ரயிலில் சென்ற கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழப்பு..! கோட்டாட்சியர் விசரணைக்கு உத்தரவு..!

11:01 AM May 03, 2024 IST | Kathir
வேலை செய்யாத அபாய சங்கிலி    ரயிலில் சென்ற கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழப்பு    கோட்டாட்சியர் விசரணைக்கு உத்தரவு
Advertisement

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கஸ்தூரி(வயது 21) என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொல்லம் விரைவு ரயிலில் சென்றுள்ளார். அவருடன் உறவினர்கள் பதினோரு பேரும் அந்த ரயிலில் பயணித்துள்ளனர்.

Advertisement

இவர்கள் பயணித்த அந்த ரயில், உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது கர்ப்பிணி பெண் கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது, ரயிலில் இருந்து கீழே விழுந்தார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயற்சி செய்தனர், ஆனால் ரயில் நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள பெட்டிக்குச் சென்று அபாய சங்கிலியை இழுத்தபிறகு ரயில் 8 கிலோமீட்டர் தூரம் தள்ளி நடுவழியில் நின்றது.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ மாம்பாக்கத்தில் கஸ்தூரி சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற விருத்தாச்சலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அபாய சங்கிலியை இழுத்தும் ரயில் நிற்காமல் சென்றதால் தான் கீழே விழுந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என்று உறவினர்கள் குற்றமச்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கோட்டாட்சியருக்கு ரயில்வே காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 9 மாதமே ஆகிய காரணத்தினால் கோட்டாட்சியர் விசாரணைக்கு ரயில் காவல்துறை பரிந்துரைத்துள்ளார்.

Tags :
Advertisement