Yatra: நரேந்திர மோடி மீது செல்போன் வீச்சு...! திருப்பூர் யாத்திரையில் பரபரப்பு...! காவல்துறை விசாரணை...!
தமிழகத்தின் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பிரதமர் நரேந்திர மோடி மீது செல்போன் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கேரளாவில் நடைபெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, திருப்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.
சிறப்பு விமானம் மூலம் கோவையில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் வந்தடைந்தார். திறந்த வெளி வாகனத்தில் வந்த அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மலர் தூவியும், பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் இருந்து பிரதமர் மோடியின் வாகனம் மீது செல்போன் வீசப்பட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. அப்போது, சிறப்பு பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடம், செல்போனை அகற்றும்படி பிரதமர் கேட்டுக் கொண்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது தீவிர விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
English Summary : A cell phone was thrown at Prime Minister Narendra Modi