For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"அதுல ஒன்னும் இல்ல கீழே போட்டுருங்க.." இடைக்கால பட்ஜெட் குறித்து இந்தியா கூட்டணி தலைவர் கடும் தாக்குதல்.!

03:54 PM Feb 01, 2024 IST | 1newsnationuser4
 அதுல ஒன்னும் இல்ல கீழே போட்டுருங்க    இடைக்கால பட்ஜெட் குறித்து இந்தியா கூட்டணி தலைவர் கடும் தாக்குதல்
Advertisement

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடப்பு ஆண்டின் பட்ஜெட், இடைக்கால பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பட்ஜெட்டில் சலுகைகள் இருக்கும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்திருக்கிறது என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

இன்று காலை 11:00 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதன் பிறகு பட்ஜெட் குறித்து உரை நிகழ்த்தினார். அவரது உரையை பெரும்பாலும் தங்களது கட்சியின் பெருமையை கூறுவது போலவே அமைந்திருந்ததாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சோலார் பேனல் அமைப்பு அவர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி மக்களுக்கு வீடுகள் போன்ற அறிவிப்புகள் வெளியானாலும் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

வருமான வரியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவரும், இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான அகிலேஷ் யாதவ். இது தொடர்பாக பேசி இருக்கும் இவர் "வளர்ச்சி திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத பட்ஜெட் எதற்கும் உபயோகமில்லாதது", என தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு விரோதமான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இது போன்ற ஒரு மோசமான சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

Tags :
Advertisement