வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன்..!! பஞ்சாயத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஊரைவிட்டு ஓடிய அதிர்ச்சி சம்பவம்..!!
சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள தெண்டுகோனா காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாமந்தோரி கிராமத்தில் அக்.26ஆம் தேதியன்று, தாக்கூர் ராமின் மகன் அருண் திவான் என்பவர், ஒரு இளம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, உடலுறவு வைத்துள்ளார். மறுநாள் காலை 5 மணியளவில் அந்த சிறுவன் சிறுமியின் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது, குடும்பத்தினர் அவரைப் பிடித்தனர்.
இந்த விவகாரம் காட்டுத்தீ போல் கிராமம் முழுவதும் பரவியது. அருண் திவானைக் காப்பாற்றுவதற்காக கிராமத்தைச் சேர்ந்த சிலருடன் சிறுமியின் வீட்டுக்கு அருண் திவானின் குடும்பத்தினர் வந்தனர். ஆனால், சிறுமியின் குடும்பத்தினர் இந்த விவகாரத்தை போலீசுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர். அப்போது, அருண் திவானின் மாமாவின் நண்பரான கிராம ஆசிரியர் ஒருவர், இது கிராமத்து விவகாரம் என்றும், போலீசுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் சிறுமியின் குடும்பத்தினரை சமாதானப்படுத்தினார்.
பையனுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்தார். அருண் திவான் சம்மதித்து, கூட்டத்தில் கிராம மக்களிடம், "நான் சிறுமியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்" என்று கூறினார். அக்டோபர் 27ஆம் தேதி இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருப்பினும், அருண் திவான் தனது நண்பர்கள் மற்றும் மாமாவுடன் சேர்ந்து வேறு திட்டங்களை வைத்திருந்தார். அக்டோபர் 27 அன்று காலை, 8:30 மணியளவில் சிறுவன், "நான் குளத்தில் குளிக்கப் போகிறேன்" என்று கூறிவிட்டு, சிறுமியின் வீட்டை விட்டு வெளியேறி, சில நண்பர்களுடன் கிராமத்தை விட்டு வெளியேறினார்
காலை 9 மணியளவில், சிறுமிக்கு அருண் திவானிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கு அவர், "நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்" என்று கூறினார். இதைக் கேட்டதும் அந்த சிறுமி மனம் உடைந்து போனாள். கிராம மக்கள் முன்னிலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்க முடியாமல், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.