முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்திய அவலம்..!! தமிழ்நாட்டில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்..!!

The incident of a boy being urinated on and abused near Usilampatti has caused a stir.
07:39 AM Jan 20, 2025 IST | Chella
Advertisement

உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாடாளுமன்றத் தகவலின்படி, தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் 345 கிராமங்கள் பட்டியலினத்தோருக்கு சாதிய வன்கொடுமைகள் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கேற்ப இரட்டை குவளை முறை தொடங்கி வேங்கைவயல் விவகாரம் வரை அடுத்தடுத்து சாதிய தீண்டாமை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர். அதிலும் தென் மாவட்டங்களில் அதிகளவில் உள்ளது. அந்த வகையில் தற்போது உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் வசித்து வருகிறார். கடந்த புரட்டாசி மாதம் நடந்த திருவிழாவின் போது, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையின் போது 17 வயதாகும் அந்த சிறுவனை மற்ற சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர், ஊர் கண்மாய் அருகில் வைத்து சிறுவனை கொடூரமாக தாக்கி, சிறுவனை அனைவரின் காலிலும் விழ வைத்து கொடுமைபடுத்தியுள்ளனர். 17 வயதாகும் அந்த சிறுவனை, 6 வயது சிறுவன் ஒருவனின் காலில் விழ வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த சிறுவன் மீது சிறுநீர் கழித்த அவலமும் நடந்துள்ளது. அந்த சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில், சாதியை சொல்லி கொச்சையாகவும் பேசியுள்ளனர். இதுதொடர்பாக சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில், அதே கிராமத்தைச் சேர்ந்த உக்கிர பாண்டியன், கிஷோர், மணிமுத்து, பிரேமா, சந்தோஷ் மற்றும் நித்தீஷ் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகவுள்ள அவர்களை போலீசார், வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”இது மட்டும் நடந்துவிட்டால் 2026இல் பாஜக ஆட்சியமைப்பது உறுதி”..!! அண்ணாமலை அதிரடி..!!

Tags :
சாதிய வன்கொடுமைசிறுவன்மதுரை மாவட்டம்
Advertisement
Next Article