"என்னையா கேவலப்படுத்துற.? என்ன செய்றேன் பாரு.? இன்ஸ்டாகிராமில் காதல் வலை.! ஆபாச புகைப்படம் மிரட்டல்.!
குஜராத் மாநிலத்தில் தங்களது மேலதிகாரியின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் குஜராத் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். அந்த கம்பெனியின் மேல் அதிகாரி குறித்த பெண்ணை தொழில் ரீதியாக அவமானப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் வேலையை ராஜினாமா செய்த அவர் தனது சக பணியாளர் ஒருவருடன் சேர்ந்து முதலாளிக்கு எதிராக திட்டம் தீட்டி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் போலியான கணக்கு ஒன்றை தொடங்கி அதிலிருந்து தங்களது முதலாளிக்கு மெசேஜ் அனுப்பி இருக்கின்றனர் . மேலும் அவருடன் ஆபாச படங்களையும் பகிர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த கம்பெனியின் மேல் அதிகாரியும் தனது நிர்வாண புகைப்படங்களை குறித்த இன்ஸ்டாகிராம் கணக்கில் அனுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த மேல் அதிகாரிக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் வர தொடங்கி இருக்கிறது.
மேலும் அவரது மனைவிக்கும் அவரது நிறுவனத்தின் முகவரிக்கும் குறித்த மேலதிகாரியின் ஆபாச புகைப்படங்களை போட்டோ எடுத்ததோடு அவர் அனுப்பிய செய்திகளையும் பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்பி மிரட்டி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவர் சைபர் கிரைம் அதிகாரிகளிடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த சைபர் கிரைம் காவல்துறை பெண் மற்றும் அவருக்கு உதவியை மற்றொரு பணியாளரையும் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .