For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காஷ்மீர் : பள்ளி மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து 4 பேர் பலி.. பலர் மாயம்!!

03:35 PM Apr 16, 2024 IST | Mari Thangam
காஷ்மீர்   பள்ளி மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து 4 பேர் பலி   பலர் மாயம்
Advertisement

ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், ஜீலம் ஆறு உட்பட பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஜீலம் ஆற்றில் ஸ்ரீநகரில் உள்ள கந்த்பாலில் இருந்து பட்வாராவுக்கு 12 பள்ளி மாணவர்கள் உட்பட பலர் படகில் பயணம் செய்தனர். படகு ஆற்றின் நடுவே சென்றபோது திடீரென பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட பலரும் தண்ணீரில் தத்தளித்து உயிருக்காக போராடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு படையினர் ஏழு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 4 பேர் உயிரிழந்துவிட்டனர் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் மாயமாகியுள்ளதால், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சிறிய படகில் நிறைய பேர் பயணம் செய்ததால், விபத்து ஏற்பட்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Tags :
Advertisement