For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

SYDNEY: பிரசங்கத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட பாதிரியார்.!! பதற வைக்கும் வீடியோ காட்சி.!!

08:09 PM Apr 15, 2024 IST | Mohisha
sydney  பிரசங்கத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட பாதிரியார்    பதற வைக்கும் வீடியோ காட்சி
Advertisement

Sydney: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 6 கடைக்காரர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பதற்றம் அடங்குவதற்குள் மற்றொரு கொடுமையான சம்பவம் நடந்தேறி உள்ளது. சிட்னி நகரைச் சேர்ந்த சர்ச் பாதிரியார் மற்றும் 4 நபர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

மேற்கு சிட்னியின் வேக்லி பகுதியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த பிஷப் மார் மாரி இம்மானுவேல் இரக்கமற்ற முறையில் கத்தியால் கொடூரமாக குத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருக்கிறது.

திங்கள்கிழமை மாலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் தேவாலயத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிஷப் இம்மானுவேல் கத்தியால் குத்தப்பட்டதை தொடர்ந்து தேவாலயத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த கொடூர தாக்குதல் நடத்திய நபரையும் காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்தனர்.

சிலிர்க்க வைக்கும் லைவ் ஸ்ட்ரீம் காட்சிகளில் பிஷப் இம்மானுவேல் சபையில் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்துவதும் இதனைத் தொடர்ந்து அலறி அடித்த பொதுமக்கள் பிஷப்பை காப்பாற்றுவதற்காக ஓடும் காட்சிகளும் பதிவாகி இருக்கின்றன. மேலும் இந்த சம்பவத்தில் பிஷப்புடன் மேலும் 4 நபர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தொடர் கத்திக்குத்து சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். இவர்களது தீவிரமான நடவடிக்கை காரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு நியூஸ் சவுத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சர்வீஸ் முதலுதவி அளித்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அனைவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது உறுதி செய்துள்ள காவல் துறையினர் பிஷப் இம்மானுவேல் அனுமதிக்கப்பட்டுள்ள லிவர்பூல் மருத்துவமனை காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தி சன் பத்திரிக்கைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: PM MODI | “திமுகவால் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அவமானம்”… அம்பாசமுத்திரத்தில் கண் கலங்கிய பிரதமர் மோடி.!!

Tags :
Advertisement