பொதுமக்கள் மீது சரமாரி தீவிரவாத தாக்குதல்!. பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!. அமித் ஷா கடும் எச்சரிக்கை!
Ganderbal Attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தின் சோனாமர்க் பகுதியில் கட்டுமான தளத்தில் பயங்கரவாதிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்பாக்கிச் சூடு நடத்தினர். வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் பலியானவர்கள், காஷ்மீரை சேர்ந்த மருத்துவ மற்றும் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதையில் பணிபுரியும் ஒப்பந்ததார தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ராணுவமும் போலீசும் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளது. "இந்த சம்பவம் அடர்ந்த வனப்பகுதியில் நடந்துள்ளது, ஆனால் பாதுகாப்பு படையினர் விரைவாக அந்த இடத்தை அடைந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ககாங்கிரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் ஒரு இழிவான கோழைத்தனமான செயலாகும். இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க மாட்டார்கள், மேலும் நமது பாதுகாப்புப் படையினரின் கடுமையான பதிலை எதிர்கொள்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஜூன் 9 ஆம் தேதி ரியாசியில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒன்பது யாத்ரீகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும் .
Readmore: பயங்கரம்.. காதலிக்க மறுத்த 11 ஆம் வகுப்பு மாணவியை உயிருடன் எரித்த காதலன்..!!