For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப வந்த வங்கி ஊழியரை கொலை செய்துவிட்டு பணப்பெட்டியுடன் தப்பியோட்டம்..!! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

The incident of a bank employee being shot dead in broad daylight and fleeing with the money has caused great shock and excitement.
02:49 PM Jan 16, 2025 IST | Chella
ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப வந்த வங்கி ஊழியரை கொலை செய்துவிட்டு பணப்பெட்டியுடன் தப்பியோட்டம்     பட்டப்பகலில் நடந்த பயங்கரம்
Advertisement

வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, பணத்துடன் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம் பீதர் நகரில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இருந்து சுமார் காலை 11.30 மணியளவில் வங்கி ஊழியர்கள் 3 பேர் பாதுகாப்புடன் கூடிய 4 சக்கர வாகனத்தில் வந்திறங்கினர். பின்னர், அவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றனர்.

அப்போது, திடீரென அங்கு வந்த 2 மர்ம நபர்கள் வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வங்கி ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த மற்றொரு ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடித்தவர்களை பிடிக்க போலீசார் 4 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றனர். பட்டப்பகலில் வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, பணத்துடன் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : அப்பா ஃபோனில் மகளின் ஆபாச வீடியோ..!! 14 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர்..!! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Tags :
Advertisement