Tail: வாலுடன் பிறந்த குழந்தை!… அகற்றினால் உயிருக்கே ஆபத்து!… அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!
Tail: சீனாவில் முதுகு தண்டுவடத்தில் நரம்பியல் கோளாறு காரணமாக வாலுடன் பிறந்த ஆண் குழந்தையை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சீனாவில் கடந்த வாரம் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் குழந்தையின் பின் பகுதியில் 10 செமீ (4 அங்குலம்) வால் உள்ளது. மருத்துவர்கள் இந்த வாலை இணைக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் என்று அழைக்கிறார்கள். அதாவது, முதுகுத் தண்டுவடத்தில் குறைபாடு உள்ள நரம்பியல் கோளாறு. இதுவே இந்த வாலுக்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்திருப்பதால் அதை அகற்ற முடியாது என்றும், அதை அகற்றினால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மிகவும் அரிதான நோயாக அறியப்படுகிறது. ஆகையால் குழந்தை வாலுடன் வளர உள்ளது. குழந்தை வளர வளர வால் வளருமா என்று பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: மக்களே உஷார்!… கடைகளில் விற்கப்படும் Packaged Water!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!