ஸ்லீப்பர் கோச் பஸ்ஸில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்..!! திடீரென வந்த போலீஸ்.. அடுத்து நடந்தது என்ன?
தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் இருந்து ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்தின் ஓட்டுனரால் 26 வயது பெண் பயணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
ஹரிகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த பஸ்ஸில் மொத்தம் 35 பயணிகள் இருந்தார்கள்.. பஸ்ஸில் சித்தையா மற்றும் கிருஷ்ணா என்ற 2 டிரைவர்கள் இருந்தனர். இதில் கிருஷ்ணாவுக்கு 40 வயதாகிறது. நிர்மலிலிருந்தே சித்தையா பஸ்ஸை ஓட்டிக் கொண்டு வந்தார்.. அப்போது பஸ் ஸ்டாண்டில் 27 வயது பெண் ஒருவர், தன்னுடைய 7 வயது மகளுடன் ஏறினார்.. டிரைவர் சித்தையா பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்த இன்னொரு டிரைவரான கிருஷ்ணா, இந்த பெண்ணை கவனித்தார்.. பஸ்ஸில் ஏறியதுமே அந்த பெண் ஒரேஒரு டிக்கெட் வாங்கி கொண்டு, 7 வயது மகளுக்கு டிக்கெட் எடுக்காமல் உக்கார்ந்துவிட்டார்.
ஐதராபாத் அருகில் நள்ளிரவு 12:15 மணிக்கு பஸ் வந்தபோது, எல்லாருமே தூங்கிவிட்டனர்.. அப்போது கிருஷ்ணா, பின்னாடி ஸ்லீப்பர் கோச்சுக்கு சென்று, மகளுடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியில் அலறி எழுந்தார்.. ஆனால், அதற்குள் அந்த பெண்ணின் வாயில் போர்வையை திணித்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் கிருஷ்ணா.பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்..
அதிர்ச்சியிலிருந்து மீண்ட அந்த பெண்ணோ, உடனடியாக 100க்கு போன் செய்து போலீசாரிடம் விஷயத்தை சொன்னார்.. ஐதராபாத் தாண்டி பஸ் வந்து கொண்டிருப்பதையும், பஸ் நம்பரையும் போலீசாரிடம் சொன்னார். இதையடுத்து, பஸ் ரூட்டை கண்டுபிடித்த போலீசார், தர்நாகா மெட்ரோ ரயில் ஸ்டேஷன் அருகே மடக்கி பிடித்துவிட்டார்கள்.. டிரைவர் கிருஷ்ணா தப்பித்து ஓடிய நிலையில், சித்தய்யாவை கைது செய்த போலீசார் பஸ்ஸையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உஸ்மானியா பல்கலைகழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், தப்பியோடிய கிருஷ்ணாவை பிடிக்க, தனிப்படையும் அமைக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு கிருஷ்ணா கைது செய்யப்பட்டிருக்கிறார். ஓடும் பஸ்ஸிலேயே பலாத்காரம் செய்த இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரைவர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடக்கிறது.
Read more ; விரைவில் இந்த 12 விமான நிலையங்களில் Digiyatra வசதி..!! இதனால் என்ன பயன்?