71 வயது மூதாட்டியை கதறவிட்ட 23 வயது இளைஞர்..!! திருத்தணியில் அதிர்ச்சி சம்பவம்..!!
71 வயது மூதாட்டியை 23 வயதான இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பொன்பாடி கிராமத்தில் 71 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால், மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனை அதேபகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்ற இளைஞர் நோட்டமிட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் மூதாட்டி துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மூதாட்டியின் வீட்டிற்குள் சதீஷ் நுழைந்துள்ளார். இதனைக் கண்டு மூதாட்டி பீதியடைந்தார். பின்னர், தான் கொண்டு வந்த கத்தியைக் காட்டி மிரட்டி மூதாட்டியை அந்த இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மூதாட்டியிடம் இருந்த தங்க கம்மல் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு சதீஷ் தப்பியோடியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த சதீஷை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.