For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தை!. விடிய விடிய நடக்கும் மீட்புப்பணி!. அதிர்ச்சி காட்சிகள்

Rajasthan: Two-year-old girl falls into borewell in Dausa's Bandikui, rescue ops underway
08:59 AM Sep 19, 2024 IST | Kokila
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தை   விடிய விடிய நடக்கும் மீட்புப்பணி   அதிர்ச்சி காட்சிகள்
Advertisement

Borewell: ராஜஸ்தானில் 35 அடி ஆழ ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Advertisement

ராஜஸ்தானின் தௌசாவில் உள்ள பாண்டிகுய் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி 35 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தௌசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், காவல் கண்காணிப்பாளர் ரஞ்சிதா சர்மா, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

5 மணிநேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் SDRF மற்றும் NDRF குழுக்கள் வரவழைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தௌசா காவல் கண்காணிப்பாளர் ரஞ்சிதா சர்மா கூறுகையில், கேமரா மூலம் குழந்தையின் அசைவு மற்றும் நிலையை அறிய முயற்சித்து வருகிறோம். குழந்தையை பாதுகாப்பாக மீட்க பல வழிகளில் முயற்சித்து வருகிறோம்" என்றார்.

மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் கூறுகையில், "எஸ்டிஆர்எஃப் மற்றும் என்டிஆர்எஃப் குழுவினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குழந்தைக்கு உணவு அனுப்ப முயற்சித்து வருகிறோம் என்றார். 35 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டதாகவும் அவளது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Readmore: ஐபிஎல் 2025ன் மெகா ஏலம் குறித்த அப்டேட்!. எப்போது, ​​எங்கு நடத்தலாம்?. வெளியான முக்கிய தகவல்!

Tags :
Advertisement