உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த 19 வயது இளைஞர்!… 29 ஆயிரம் கோடிக்கு அதிபதியானது எப்படி?
உலக பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் தற்போது முகேஷ் அம்பானி 9வது இடத்தில் உள்ளார். அதையும் தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் 19 வயது இளைஞன் கிளெமெண்ட் டெல் வெச்சியோ.ஃபோர்ப்ஸ் படி, அவரது நிகர மதிப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய். பிரபல கண்ணாடி நிறுவனமான எஸ்சிலர் லக்சோட்டிகாவின் தலைவராக இருந்த இத்தாலிய கோடீஸ்வரர் லியோனார்டோ டெல் வெச்சியோ கடந்த ஆண்டு தனது 87வது வயதில் காலமானார்.
அவரது 2.1 லட்சம் கோடி சொத்துக்கள் அனைத்தும் அவரது மனைவி மற்றும் 6 குழந்தைகளுக்கு சென்றது. அதில் ஒரு மகன், கிளெமென்ட் டெல் வெச்சியோ, சுமார் 29 ஆயிரம் கோடிக்கு உரிமையாளராகிவிட்டார். இதன் மூலம் கடந்த ஆண்டின் இளைய கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் பல முன்னணி நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கும் கிளெமென்ட் டெல் வெச்சியோ, தற்போது தொழிலில் ஈடுபடாமல் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்பில் ஆர்வம் உள்ள அவர், பட்டப்படிப்பு முடித்தவுடன் அடுத்த விஷயங்களை மேற்கொள்வார் எனத் தெரிகிறது. இவர் மட்டுமின்றி இவரது மூத்த சகோதரர்களும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.