முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்ஸ்டாவில் பழக்கமான 16 வயது சிறுவன்..!! திடீரென மாயமான 10 வயது சிறுமி..!! காதல் ஜோடியை சேர்த்து வைத்த 3 நண்பர்கள்..!!

It was revealed that the girl had gone to find her Instagram friend. The 16-year-old boy's three friends were also helping to keep their relationship together.
02:48 PM Jan 11, 2025 IST | Chella
Advertisement

குஜராத் மாநிலம் சபர் கந்தா மாவட்டம் தன்சுரா கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர், அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், தாயின் செல்போனில் சிறுமி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, சிறுமி அங்குள்ள வேறொரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழகி வந்துள்ளார்.

Advertisement

சிறுவனும் சிறுமியுடன் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த டிசம்பர் 31ஆம் தேதியன்று சிறுமி வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். பின்னர், அவரை தேடி அலைந்த பெற்றோர், சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை வலைவீசி தேடி வந்தனர்.

விசாரணையில், சிறுமி இன்ஸ்டாகிராம் நண்பரை தேடிச் சென்றது தெரியவந்தது. இவர்களின் காதலை சேர்த்து வைக்க 16 வயது சிறுவனின் 3 நண்பர்களும் உதவி இருக்கின்றனர். இதனையடுத்து, சிறுமியை கண்டறிந்து மீட்ட காவல்துறையினர், 16 வயது சிறுவன் மற்றும் அவர்களின் நண்பர்கள் 3 பேரை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : “இன்றைக்கு வந்துவிட்டு நினைத்தை எல்லாம் பேச இது ஒன்றும் சினிமா அல்ல”..!! ”ரத்தம் சிந்தி ஆட்சிக்கு வந்துள்ளோம்”..!! விஜய்க்கு பதிலடி கொடுத்த அமைச்சர்..!!

Tags :
இன்ஸ்டாகிராம்உல்லாசம்காதல்சிறுமிசிறுவன்
Advertisement
Next Article