For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி..!' படிப்பதற்கு வயது தடை அல்ல!!

A 105-year-old woman in the United States has earned a master's degree from a university, surprising everyone.
07:57 AM Jun 25, 2024 IST | Mari Thangam
 105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி     படிப்பதற்கு வயது தடை அல்ல
Advertisement

அமெரிக்காவில் தனது 105 ஆவது வயதில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழக முதுகலைப் பட்டம் பெற்றுள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

சாதனைகளை நிகழ்த்துவதற்கும் பிடித்த விஷயங்களை செய்வதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. அந்த வகையில், தனது 105 வது அகவையில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கியுள்ளது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது.

அமெரிக்காவில் ஸ்டேன்போர்ட் பலக்லைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி ஹிஸ்லோப் என்னும் அந்த மூதாட்டி தனது முதுகலைப் பட்டதை வாங்கிக்கொண்டார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1940 ஆம் ஆண்டு கின்னி தனது இளங்கலைப் பட்டத்தை ஸ்டேன்போர்டில் பெற்றார். அதைத்தொடர்ந்து தனது முதுகலைப் படிப்பை பயிலத்தொடங்கிய கின்னி ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் அந்த சமயத்தில் கின்னியின் காதலன் ஜார்ஜ் இரண்டாம் உலகப்போரில் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கின்னியின் படிப்பு பாதியில் தடைபட்டது. தற்போது 83 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்த கின்னிக்கு முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பட்டத்தை வாங்கிக்கொண்ட கின்னி இதுகுறித்து பேசுகையில், கடவுளே , இதற்காக நான் வெகு காலமாக காத்திருந்தேன். முயற்சி செய்தால் எல்லோரும் மேல் படிப்பில் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார்.

Read more ; அதிசயம்!. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கல்லறையில் புதைக்கப்பட்ட ஒயின் கண்டுபிடிப்பு!

Tags :
Advertisement