96 வயது காதலியை மணக்கும் 100 வயது காதலர்... காதலுக்கு வயதில்லை போல....
100 வயதான முதியவர் ஒருவர் 96 வயதான மூதாட்டியை காதலித்து மணக்கும் சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறுகிறது.
காதலுக்கு கண்ணில்லை என்பதை கேள்விப்பட்டிருப்போம். அது உண்மை தான் போல, அதற்கு எடுத்துக்காட்டாய் ஒரு ஜோடி வயதை கடந்து காதலித்து வருகின்றனர். அதனை தற்போது பார்க்கலாம்.
அமெரிக்காவின் விமானப்படையில் பணிபுரிந்தவர் 100 வயதான ஹரோல்ட் டெரன்ஸ். 1942ல் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்துள்ளார். தெல்மா என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 70 ஆண்டுகள் நல்ல படியாக சென்ற நிலையில், அவரது மனைவி தெல்மா அவரை விட்டு பிரிந்து மண்ணுக்கு சென்றார்.
இதனிடையே, கடந்த 2021ம் ஆண்டு ஜீன் ஸ்வெர்லின் என்பவரிடம் ஹரோல்ட் டெரன்ஸ் தனது காதலை தெரிவித்துள்ளார். அதற்கு 96 வயதான ஜீன் ஸ்வெர்லின் பச்சை கொடி காட்டியுள்ளார். 21 வயதில் திருமணமான ஜீன் ஸ்வெர்லின் 40 வயதில் தனது கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், வரும் ஜூன் மாதம் தனது காதலியான 96 வயதான ஜீன் ஸ்வெர்லினை திருமணம் செய்ய உள்ளார். 2ம் உலகப்போரில் பிரான்ஸ் நாட்டுக்கு அமெரிக்கப்படைகள் வந்திறங்கிய கடற்கரையில் இவர்களது திருமண நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Abortion | 18 வது வாரம் வரை கருக்கலைப்பு செய்யலாம்.!! சட்டத்தை மாற்றி அமைத்த டென்மார்க் அரசு.!!