நைஜீரியாவில் சோகம்.. பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் 94 பேர் பலி..!! 50க்கும் மேற்பட்டோர் காயம்
நைஜீரியா நெடுஞ்சாலையில் ஆயில் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எண்ணெய் டேங்கர் வெடித்து 94 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் பயணித்த டேங்கர் லாரி நள்ளிரவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானது. அதிலிருந்து சிந்திய எண்ணையை எடுக்க அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. அப்போது யாரும் எதிர்பாராதா விதமாக டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தால் எண்ணெய் எடுக்க வந்த 94 பொதுமக்கள் பரிதாபமாக உடல் சிதறி பலியாகின. வடக்கு நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "ஜிகாவா மாநிலத்தில் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்பட்டதும் குடியிருப்பாளர்கள் கவிழ்ந்த டேங்கரில் இருந்து எண்ணெய் எடுக்க குவிந்தனர். எரிபொருளைப் பெறுவதற்காக டஜன் கணக்கான மக்கள் வாகனத்தை நோக்கி ஓடியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 94 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்" என்றார்.
Read more ; மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு..!! பண்டிகைய கொண்டாடுங்களே..