93 குழந்தைகள் மீட்பு!… கடத்தல் எச்சரிக்கை!… அனைத்து மாநிலங்களுக்கும் பறந்த உத்தரவு!
Child Protection: ராஜஸ்தான், உத்தரகண்ட் மாநிலங்களுக்கு கடத்தப்பட இருந்ததாக உத்தரப் பிரதேச மாநிலம் பிரக்யராஜில் உள்ள சீமாஞ்சல் எக்ஸ்பிரஸில் இருந்து 93 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதலை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், கடத்தல் வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டாலும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகள் குறைந்தபாடில்லை. எனவே குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்கும் வகையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதுபோன்ற வழக்குகள் வெளிச்சத்துக்கு வரும்போது கடும் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ கையெழுத்திட்ட கடிதம் விமான நிலைய அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாநில கல்வித் துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் 2005 ஆம் ஆண்டின் சிபிசிஆர் (குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்) சட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராயவும் துறைகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிறார் நீதிச் சட்டம் 2015 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 370 (ஒரு நபர் / குழந்தை சுரண்டல்) போன்ற வழக்குகளில் பயன்படுத்தப்படலாம். பரிந்துரைகளில், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், முறையான கல்வியில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
முன்னதாக, நேற்று உ.பி.யின் பிரயாக்ராஜ் சந்திப்பில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சோதனை செய்த போது, ரயிலில் இருந்து 6 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.குழந்தைகளுடன் 6 பேர் கொண்ட குழுவினர் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். இதேபோல், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு கடத்தப்பட்டதாக சீமாஞ்சல் எக்ஸ்பிரஸில் இருந்து 93 சிறார்களை அதிகாரிகள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: 50 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த கெஜ்ரிவால்…! முக்கியமாக இந்த விஷயங்களை பண்ணக்கூடாது..! என்னென்ன..!