For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விமானப்படையின் 92வது ஆண்டு விழா!. லடாக் டூ அருணாச்சலம்!. 7,000 கி.மீ. சாகச பேரணி!. தாய்நாட்டிற்காக சேவை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு!.

7,000 km-long car rally from Ladakh to Arunachal to mark Air Force's 92nd anniversary | DETAILS
07:53 AM Sep 29, 2024 IST | Kokila
விமானப்படையின் 92வது ஆண்டு விழா   லடாக் டூ அருணாச்சலம்   7 000 கி மீ  சாகச பேரணி   தாய்நாட்டிற்காக சேவை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு
Advertisement

Air Force anniversary: இந்திய விமானப்படையின் (IAF) 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு, லடாக்கில் உள்ள தோயிஸ் முதல் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் வரை 7,000 கிமீ நீள கார் பேரணி நடைபெறவுள்ளது.

Advertisement

இந்திய விமானப்படை1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பிரிட்டிஷ் பேரரசின் துணை விமானப்படையாக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. தற்போது 92வது ஆண்டு விழா வரும் அக்டோபர் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, உலகின் மிக உயரமான விமானப்படை நிலையங்களில் ஒன்றான லடாக்கின் தோயிஸ் முதல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் வரை 7,000 கிமீ தூரம் கார் பேரணி நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இதற்காக, அக்டோபர் 8ம் தேதி கடல் மட்டத்திலிருந்து 3,068 மீ., உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான விமானப்படை நிலையங்களில் ஒன்றான தோய்ஸில் இருந்து கொடியேற்றப்படவுள்ளது. இந்த பேரணியில் மொத்தம் 52 விமான வீரர்கள், ஓட்டுநர்களாக மற்றும் இணை ஓட்டுநர்களாக கலந்துகொள்வார். பல பெண் அதிகாரிகள், விமானப்படையைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு இந்த பேரணியில் வாகன ஓட்டிகளாக பங்கேற்கின்றனர். இந்த பேரணி இந்தியில் 'வாயு வீர் விஜேதா பேரணி' என்று அழைக்கப்படுகிறது.

இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் பேரணியின் நோக்கம், உத்தரகாண்ட் போர் நினைவுச்சின்னத்தின் வீரர்களுடன் ஒருங்கிணைத்து, இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற வரலாறு, பல்வேறு போர்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் வான் வீரர்களின் வீரத்தின் செயல்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்து மற்றும் தாய்நாட்டிற்கு சேவை செய்ய இளைஞர்களை ஈர்க்கும் நோக்கமாகும்.

Readmore: இன்று உலக இதய தினம் 2024!. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க டிப்ஸ்!

Tags :
Advertisement