"தாத்தா, என்ன தொடாதீங்க" கதறிய 9 வயது சிறுமி; 60 வயது முதியவர் செய்த காரியம்..
சென்னை, அம்பத்தூர், வில்லிவாக்கத்தில் உள்ள நேரு நகர் பகுதியில், 60 வயதான சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு 9 வயதான சிறுமி ஒருவர், தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார். சிறுமியுடன் யாரும் இல்லாமல், அவர் தனியாக விளையாடுவதை சிதம்பரம் கவனித்துள்ளார். இதையடுத்து, அவர் சிறுமியை தனியாக அழைத்துள்ளார். சிறுமியும், தாத்தா என்ற பழக்கத்தில் அவருடன் சென்றுள்ளார்.
ஆனால் சிறுமி தனியாக சென்றதும், சிதம்பரம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சுதாரித்த அக்கம்பக்கத்தினர் நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், முதியவர் சிதம்பரத்தை பிடித்து அடித்து நொறுக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து, நடந்த சம்பவத்தை குறித்து வில்லிவாக்கம் போலீசாருக்கு விவரித்த பொதுமக்கள், முதியவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புகாரின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 60 வயதான சிதம்பரத்தை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தார். வீட்டின் வாசலில் விளையாடிய சிறுமிக்கு நடந்த இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.