America | கோடீஸ்வரனுக்கு 1 டாலர் தானம் வழங்கிய 9 வயது சிறுவன்.!! சுவாரசிய சம்பவம்.!!
America: பல விந்தையான சம்பவங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. தன்னுடைய பாக்கெட் மணியை அந்தக் கோடீஸ்வரனுக்கு கொடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. பணத்தை கொடுத்து விட்டு இரக்கத்துடன் அந்தக் கோடீஸ்வரனை பார்த்து சிறுவன் கையசைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான். இதனை பாராட்டும் வகையில் சிறுவனின் பெற்றோர் அவனுக்கு பணம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சிறுவன் வெளியே சென்ற போது ஒரு நபரை பார்த்திருக்கிறான். அந்த நபர் சிறுவனுக்கு பிச்சைக்காரர் போல் தோன்றியிருக்கிறார். எனவே அவர் மீது இரக்கப்பட்டு தன்னிடமிருந்த ஒரு டாலரை அந்த சிறுவன் கொடுத்திருக்கிறான்.
செய்தியாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி அந்த நபர் ஒரு மல்டி மில்லினர் தொழிலதிபர் என்பது தெரியவந்துள்ளது. அவரது பெயர் மேட் பஸ்பீஸ் என்பதும் அமெரிக்காவின்(America) லூசியானா மாகாணத்தில் வசித்து வருவதும் தெரிய வந்திருக்கிறது. இந்த சுவாரஸ்யமான நிகழ்வு பற்றி பகிர்ந்து கொண்ட பஸ்பீஸ் இந்த நெகிழ வைக்கும் நிகழ்வு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் அவர் தங்கியிருந்த காம்ப்ளக்ஸில் தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் உடனடியாக வெளியேறினர். அவர்களைப் போலவே மேட் பஸ்பீசும் தன் படுக்கையில் இருந்து உடனடியாக வெளியேறினார். பின்னர் தான் அது தீயணைப்பிற்கான எச்சரிக்கை மாக் டிரில் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேட் பஸ்பீஸ் காபி குடிப்பதற்காக வெளியே சென்றார்.
அப்போது மேட் பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்திருக்கிறார் . அவர் மிகவும் களைப்பாக காணப்பட்டுள்ளார். காபி ஷாப்பிற்குள் நுழைந்த பின்பு தான் இன்று காலை தனது பிரார்த்தனைகளை செய்யவில்லை என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. அப்போதுதான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
மேட் பிரார்த்தனை முடித்து கண்களை திறந்த போது ஒரு சிறுவன் அவரை நோக்கி வந்திருக்கிறான். இதனைத் தொடர்ந்து தன்னிடம் உள்ள ஒரு டாலரை தொழிலதிபரிடம் கொடுத்திருக்கிறான் அந்த சிறுவன். இந்தப் பணத்தை எனக்கு ஏன் கொடுத்தீர்கள் என மேட்டர் கேட்டபோது ஒருவேளை நீங்கள் வீடற்றவராக இருக்கலாம். எனவே இந்த ஒரு டாலர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீடற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன் என ஒன்பது வயது சிறுவனான கெல்வின் எல்லிஸ் ஜூனியர் தெரிவித்துள்ளான்.
ஒருவருக்கு உதவக் கூடிய வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக தெரிவித்த சிறுவன் இந்த பணம் தனது பெற்றோர் நல்ல மதிப்பெண் பெற்றதற்காக சன்மானமாக வழங்கியது எனவும் தெரிவித்துள்ளான். குழந்தையின் பதிலை கேட்ட பஸ்பீஸின் கண்கள் கலங்கியது. சிறுவனின் கருணை உள்ளத்தை பாராட்டி அவனுக்கு பரிசாக பைக் ஒன்றை வழங்கி இருக்கிறார் மேட். மேலும் சிறுவனுக்கு என்ன தேவை என்றாலும் தன்னிடம் கேட்குமாரும் கூறி இருக்கிறார்.
மேட் பஸ்பீஸ் விளையாட்டு சாதனங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் சிறுவன் கெல்வின் எல்லிஸ் ஜூனியரின் பெற்றோரை தனது வீட்டிற்கு வரவழைத்த மேட் தன்னுடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறு கூறியிருக்கிறார். மேலும் சிறுவனுக்கு எந்த உதவியும் தேவை என்றாலும் தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் எனவும் கூறியிருக்கிறார். மனித நேயத்தில் நம்பிக்கை இல்லாத தனக்கு மனிதநேயத்திற்கான கண்களைத் திறந்தவர் இந்த சிறுவன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.