முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

5 மாதங்கள்; 9 பெண்கள்.!சேலையால் கழுத்து நெறிக்கப்பட்ட சடலங்கள்.! யார் அந்த சீரியல் கில்லர்.? அலறும் காவல்துறை.!

12:10 PM Dec 01, 2023 IST | 1newsnationuser4
Advertisement

உத்திர பிரதேசம் மாநிலம் பரேலியில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் 55 வயது பெண் சடலம் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

உத்திர பிரதேசம் மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவரது சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். காவல்துறையின் விசாரணையில் இறந்த பெண் ஊர்மிளா தேவி என தெரிய வந்திருக்கிறது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்தப் பெண் சேலையால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அங்கு தொடர்ந்த நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்து இருக்கிறது. கடந்த 9 மாதங்களில் 9 பெண்கள் சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தொடர் கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அனைத்து கொலை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என காவல்துறை சந்தேகிக்கிறது.

நவம்பர் 19ஆம் தேதி ஜெகதீஷ் ஊர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் இதேபோன்று கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது கணவரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. மேலும் இதே நபர் தான் மற்ற கொலைகளையும் செய்திருக்கலாம் எனவும் காவல்துறை சந்தேகிக்கிறது. இது தொடர்பாக கொலை சம்பவம் நடந்த இடங்களில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் தடையவியல் அடிப்படையில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags :
investigationPoliceSerial Killeruttar pradeshwomen
Advertisement
Next Article