Mexico: தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் பலி!
மெக்சிகோவின் நியுவோ லியோன் மாநிலத்தில் மே 22ஆம் தேதி சூரைக்காற்று வீசியதால் குடிமக்கள் முன்னேற்றக் கட்சியின் பிரசார மேடை சரிந்து 9 பேர் மரணமடைந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் வரும் ஜூன் 2ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அதன்படி நியூவோலியோன் மாகாணம் சான்பெட்ரோ கார்சா கார்சியா நகரில் மக்கள் இயக்க கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டனர்.
அப்போது, சூரைக்காற்று வீசியதால் குடிமக்கள் முன்னேற்றக் கட்சியின் பிரசார மேடை சரிந்து 9 பேர் மரணமடைந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து, குடிமக்கள் முன்னேற்ற இயக்கத்தின் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோர்கே அல்வரேஸ் மெய்னேஸ் கூறியதாவது, ”பலத்த காற்று அடித்ததில் சான் பெட்ரோ கார்சா கர்சியா நகரில் நடந்த பிரசார மேடை சரிந்தது.
பிரசார மேடை சரிந்ததைக் காட்டும் காணொளியில் அந்த மேடை, கூட்டத்தினர் இருந்த பகுதியில் முன்னோக்கி சரிவது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த அரசியல்வாதிகள் பாதுகாப்பான இடம் தேடி ஓட, கூடியிருந்த மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓட்டம் பிடிப்பதைக் காணொளி காட்டியது.
இதுபோல் திடீரென ஏற்படும் ஒன்றை நான் கண்டதில்லை” என்று சூரைக்காற்று கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எப்படி வீசியது என்பதை திரு அல்வரேஸ் மெய்னேஸ் செய்தியாளர்களிடம் விவரித்தார். பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த திரு அல்வரேஸ் மெய்னேஸ் தான் பிரசார கூட்டங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாகக் கூறினார்.
மக்களே..!! வெள்ளிக்கிழமை இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! கஷ்டம் மேல கஷ்டம் வரும்..!!