மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.51480 ஆக அதிகரிக்கும்... எப்போது முதல் தெரியுமா..?
புத்தாண்டின் தொடக்கத்திலேயே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. 8வது நிதி ஆணையத்தை அமைக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் சம்பளம் பெறுபவர்கள் நீண்ட காலமாக புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வந்த நிலையில் சமீபத்தில் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
இந்த ஊதியக் குழுவை அமல்படுத்துவதன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த ஊதியக் குழுவின் பலனைப் பெறலாம். 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் பலனைப் பெறலாம். அறிக்கைகளின்படி, இந்த ஊதியக் குழுவை ஜனவரி 1, 2026 அன்று செயல்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
8வது ஊதியக் கமிஷன் என்றால் என்ன?
இந்த 8வது ஊதிய கமிஷன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம், கொடுப்பனவு மற்றும் சம்பளத்தில் மாற்றங்கள் ஏற்படும்.. ஒருபுறம், இந்த ஊதியக் குழுவை அமல்படுத்திய பிறகு அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும், மறுபுறம், அகவிலைப்படியும் திருத்தப்படும். அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு ஊதியக் குழு அறிவுறுத்துகிறது. இந்த செயல்முறை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் செய்யப்படுகிறது.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.51480 ஆக உயர்வு?
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் எவ்வளவு சதவீதம் அதிகரிக்கப்படும் என்பதையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இது ஃபிட்மென்ட் காரணியால் தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி 2.57 இலிருந்து 2.86 ஆக ஃபிட்மெண்ட் காரணியை அதிகரிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், 2.86 இன் ஃபிட்மென்ட் காரணியின்படி, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18000 இலிருந்து ரூ.51480 ஆக அதிகரிக்கலாம். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிட்மென்ட் காரணி என்றால் என்ன?
8-வது ஊதிய கமிஷன் இந்த ஃபிட்மென்ட் காரணி மூலம் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை திருத்த உள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கணக்கிடப்படும் முறை இதுவாகும். பணவீக்கம், ஊழியர்களின் தேவை போன்ற காரணிகள் இதில் அடங்கும்.