For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசு பள்ளிகளில் 8,643 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள்...! உடனே நிரப்ப வேண்டும்...!

06:10 AM Jan 08, 2024 IST | 1newsnationuser2
அரசு பள்ளிகளில் 8 643 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள்     உடனே நிரப்ப வேண்டும்
Advertisement

அரசு பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழக அரசு வேதனை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த குறைந்தது ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ள நிலையில், வெறும் 1500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது கண்டிக்கத்தக்கது; இது அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக சீரழித்துவிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு 2013&14ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களோ, பட்டதாரி ஆசிரியர்களோ நியமிக்கப்படவில்லை. இந்த காலத்தில் குறைந்தது 20,000 இடைநிலை ஆசிரியர்களும், 15,000 பட்டதாரி ஆசிரியர்களும் ஓய்வு பெற்றிருப்பர். ஆனால், இந்த விவரங்களை மறைத்து விட்டு 2023&24ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக அரசு அறிவித்தது. அதன்படி பார்த்தால் அந்த இடங்களையாவது நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6553 இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று 2022 திசம்பர் மாதத்தில் அரசு அறிவித்தது. ஆனால், 2023 & ஆம் ஆண்டு முழுவதும் அந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்போது அந்த எண்ணிக்கையையும் குறைத்து 1500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது எந்த வகையில் நியாயம்? இது அரசு பள்ளிகளை எப்படி முன்னேற்றும்?

கல்வியிலும், மனிதவளத்திலும் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டது தான் காரணம். அரசு பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு தரமான கல்வியை வழங்க முடியாது. எனவே, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement