முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முடியும் காலாண்டு விடுமுறை... வரும் 4, 5-ம் தேதிகளில் 860 சிறப்பு பேருந்துகள்...! தமிழக அரசு அறிவிப்பு...!

860 special buses on coming 4th and 5th.
06:10 AM Oct 03, 2024 IST | Vignesh
Advertisement

வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து, வரும் 4, 5-ம் தேதிகளில் 860 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அக்டோபர் 5, 6-ம் தேதிகளில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 4, 5-ம் தேதிகளில் 520 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை,வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு 110 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 30 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 860 பேருந்துகள் இயக்கப்படும். இப்பேருந்துகளில் பயணம் செய்ய www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.

Tags :
holidayspecial bustn governmentTNSTCWeek days
Advertisement
Next Article