For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"வாவ் இதுவல்லவோ பக்தி."! ஸ்ரீராமருக்காக 30 வருடம் மௌன விரதம்.! 85 வயது மூதாட்டி திறப்பு விழாவிற்கு எடுத்த முடிவு.!

06:54 PM Jan 09, 2024 IST | 1newsnationuser7
 வாவ் இதுவல்லவோ பக்தி    ஸ்ரீராமருக்காக 30 வருடம் மௌன விரதம்   85 வயது மூதாட்டி திறப்பு விழாவிற்கு எடுத்த முடிவு
Advertisement

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. இந்த திறப்பு விழாவிற்கு இன்னும் 13 நாட்களே இருக்கும் நிலையில் ஸ்ரீராமரின் பக்தர்கள் அனைவரும் இந்த திறப்பு விழாவிற்காக உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

Advertisement

2019 ஆம் ஆண்டு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கியது. 1,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் இந்த கோவில் வருகின்ற 22 ஆம் தேதி திறக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன் நின்று தலைமை ஏற்று இந்தத் திறப்பு விழாவை சிறப்பாக நடத்த இருக்கிறார்.

இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜார்க்கண்டை சேர்ந்த 85 வயது மூதாட்டி தனது 30 வருட மௌன விரதத்தை முடித்திருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழ்ந்து வரும் சரஸ்வதி தேவி என்ற இந்த மூதாட்டி 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என மௌன விரதம் இருக்க தொடங்கி இருக்கிறார்.

விரதத்தை தொடங்கிய நாளிலிருந்து தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து கோவில் கட்டி முடிக்கும் வரை முழு மௌன விரதம் இருந்துள்ளார். இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருப்பதால் தனது மௌன விரதத்தை முடிப்பதாக அறிவித்திருக்கிறார் அந்த மூதாட்டி.

Tags :
Advertisement