போதைக்காக, 80 வயது மூதாட்டிக்கு வாலிபர் செய்த கொடூரம்!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள, திருவேடகம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சோனை என்ற வாலிபர். மது போதைக்கு அடிமையான இவர், தினமும் குடித்து விட்டு ரகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சோனைக்கு மது வாங்கப் பணம் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் அவரால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை. இதனால், மது வாங்க பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்து வந்த சோனை மூதாட்டி ஒருவரை பார்த்துள்ளார். திருவேடகம் கிராமத்திலேயே வசித்து வருபவர் 80 வயதான பாப்பாத்தி என்ற மூதாட்டி. மூதாட்டி காதில் அணிந்திருந்த தங்கத் தோடை கவனித்த சோனை, அதனை விற்று மது வாங்கி குடிக்க முடிவு செய்துள்ளார்.
அதன் படி, அவர் மூதாட்டியை கொலை செய்து, அவரது காதை அறுத்துள்ளார். பின்பு அவர் அணிந்திருந்த தோடுகளை எடுத்து சென்று விற்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சோழவந்தான் போலீசார், சோனையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மது போதைக்காக 80 வயது மூதாட்டி, காதறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Read more: தாயின் போனில் இருந்த ஆபாச வீடியோவை பார்த்து, 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன்!!!