For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

" அடேங்கப்பா.. 80 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான ஆஸ்கர் நாயகன்.." ஆச்சரியத்தில் ஹாலிவுட்.!

06:39 PM Jan 28, 2024 IST | 1newsnationuser7
  அடேங்கப்பா   80 வயதில் 7வது  குழந்தைக்கு தந்தையான ஆஸ்கர் நாயகன்    ஆச்சரியத்தில் ஹாலிவுட்
Advertisement

80 வயதில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை, ஏழாவது மகளின் வருகை என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர், ராபர்ட் டி நீரோ! இதைப் பற்றி சமீபத்தில் AARP என்ற இதழில் அவர் அளித்த பேட்டியில் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

இரண்டு முறை ஆஸ்கர் விருதை வென்ற, ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர், ராபர்ட் டி நீரோ, தற்போது 80 வயதில் தந்தையாகியுள்ளார். அவர் தற்போது டிஃபனி ஷென் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். அவர் மூலமாக, கடந்த மே மாதம் தனது ஏழாவது குழந்தைக்கு தந்தையானார்.

அமெரிக்காவின் AARP இதழின் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான நேர்காணலில், தனது ஏழாவது பெண் குழந்தை ஜியாவை பற்றிய கருத்துக்களை கூறி சிலாகித்து போனார்.

அவர் இதனைப் பற்றி பேசுகையில், "நான் படும் கவலை அனைத்தும் அந்த குழந்தையின் முகத்தை காணும் போது மறைந்து விடுகிறது. மேலும் அந்தக் குழந்தையின் பார்வை பரிவோடும், அன்போடும் என்னை ஏற்றுக் கொள்கிறது. அந்தக் குழந்தைக்கு வயதாகும் போது, இதனை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்பது தெரியவில்லை என்றாலும் இப்போது அனைத்தையும் அவள் கவனிக்கிறாள். 80 வயதில் தந்தையாகி இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அவளை ரசிக்க, அவளைச் சுற்றி அதிக காலம் இருக்க விரும்புகிறேன்", என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

அவர் சமீபத்தில் 'கில்லர்ஸ் ஆப் தி ஃப்ளவர் மூன்' படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான ஆஸ்கர் விருதை பெறுவதற்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் நடித்த படத்திற்காக சமீபத்தில் அவருக்கு கிடைத்த பாராட்டுகளும், ஏழாவது மகள் ஜியாவின் வருகையால் கிடைத்த மகிழ்ச்சிக்கு, வயது ஒரு தடை இல்லை என்று பலரும் கூறுகிறார்கள்.

Tags :
Advertisement