விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட 8 தமிழர்கள்..! பெங்களூரு விமான நிலையத்தில் அதிர்ச்சி… நடந்தது என்ன.?
பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட இருந்த விமானத்திலிருந்து 8 தமிழ் பயணிகள் இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அந்த பயணிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு 9.30 மணி அளவில் அம் ரிஸ்டரில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை புறப்பட தயாராக இருந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த எட்டு பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த விமான நிலைய ஊழியர்கள் அந்த எட்டு பேரையும் வேறு விமானத்தில் அனுப்பி வைப்பதாக கூறி தரையிறக்கி உள்ளனர்.
வெறும் எட்டு பேருடன் விமானம் புறப்படாது என்றும் அவர்களுக்கு வேறு ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் அன்று இரவு மற்றும் விமானம் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு வசதிகள் போன்றவையும் விமான நிறுவனத்தால் செய்து கொடுக்கப்படவில்லை.
அந்தப் பயணிகள் இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே கஷ்டப்பட்டு உள்ளனர். மறுநாள் காலை தான் அவர்களுக்கான விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இண்டிகோ நிறுவனத்தின் இந்த செயல் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர்களது நடவடிக்கையால் நாங்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் எனவும் அந்த எட்டு பயணிகளும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.