For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த வாரம் திரையரங்கில் வெளியாகும் 8 தமிழ்ப் படங்கள்..!! லிஸ்ட் இதோ..!!

As the big films are going to release in October, 8 Tamil films are releasing next week on Friday (September 20).
12:47 PM Sep 14, 2024 IST | Chella
அடுத்த வாரம் திரையரங்கில் வெளியாகும் 8 தமிழ்ப் படங்கள்     லிஸ்ட் இதோ
Advertisement

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் தற்போது எதுவும் வெளியாகவில்லை. அக்டோபர் மாதம் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவிருப்பதால், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்.20) 8 தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன.

Advertisement

கடைசி உலக போர்

    மீசைய முருக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹிப்ஹாப் ஆதி. அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் கடைசி உலக போர் செப். 20 ஆம் தேதி வெளியாகிறது.

    லப்பர் பந்து

      அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள லப்பர் பந்து படத்தினை தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார்.

      கோழிப்பண்ணை செல்லதுரை

      இயக்குநர் சீனு ராமசாமி 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடைபெற்று முடிந்தது. திரை வெளியீட்டு முன்பாகவே, ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.

      தோழர் சேகுவாரா

      90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் சத்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திரம், நகைச்சுவை என ஏராளமானப் படங்களில் நடித்துள்ளார். அலெக்ஸ் இயக்கும் தோழர் சேகுவேரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

      நந்தன்

        'உடன்பிறப்பே' படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'நந்தன்' படத்தில் சசிகுமார் உடன் ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளார்.

        சட்டம் என் கையில்

          தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர், ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். முன்னதாக நாயகனாக அறிமுகமான நாய் சேகர் திரைப்படத்தைத் தொடர்ந்து சட்டம் என் கையில் படத்தில் நடித்துள்ளார்.

          தோனிமா

            காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், வைசவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'தோனிமா'. இதை சிகை, பக்ரீத் படங்களை இயக்கிய ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார்.

            தி கன்ஃபஷன்

              அர்மோன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள தி கன்ஃபஷன் படத்தை ஜோ கியாவன்னி இயக்கியுள்ளார்.

              Read More : 2 இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம்..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

              Tags :
              Advertisement