திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு..!! 8 மாணவிகள் மயக்கம்
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மேலும் 8 மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 10 நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் திடீரென வாயுநெடி பரவியது. இதில் மாணவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுவிட சிரமம், வாந்தி உள்ளிட்டபிரச்சினைகள் ஏற்பட்டன. சிலர் மயக்கமடைந்தனர். ஆசிரியர்கள் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றினர். எனினும் 39 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக திருவொற்றியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டனர். அமோனியா வாயு கசிந்துள்ளதா என்பதை அறிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் பள்ளி வளாகத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அதில் வாயுக்கசிவின் காரணம் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளர்களும் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாயுக் கசிவுக்கான காரணத்தை சொல்லுமாறு கேட்டனர். அதற்கு பள்ளி நிர்வாகமோ அது குறித்து எதுவும் தெரியவில்லை என சொல்லவே பெற்றோர் கொந்தளித்துவிட்டனர்.
Read more ; Amaran day 4 collection : அஜித் விஜய் பட சாதனையை பின்னுக்கு தள்ளிய அமரன்..!! பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இதோ..