மின்னல் தாக்கி 6 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி!. கனமழைக்கு ஒதுங்கியபோது நிகழ்ந்த சோகம்!
Chhattisgarh: சத்தீஷ்காரில் மின்னல் தாக்கி 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.
சத்தீஷ்காரின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சோம்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோராடரை கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் 11,12ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு தேர்வு முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். பலத்த மழை பெயததால் அருகில் உள்ள கூடாரம் ஒன்றில் ஒதுங்கியுள்ளனர். இதையடுத்து, மதியம் 1.30 மணியளவில் திடீரென மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மாணவர்கள் 6 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராஜ்நந்த்கான் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும், பலத்த காயத்துடன் மீட்கப்பட்டவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் விஷ்ணு தியோ சிங், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Readmore: உலர் திராட்சையை இப்படி சாப்பிட்டு பாருங்க..!! ஏராளமான நன்மைகள்..!! அட உடல் எடையும் குறையுதாம்..!!