For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

8 நக்சல்கள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை..!! பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம்..!! சத்தீஸ்கரில் பரபரப்பு..!!

8 Naxalites have been shot dead in an encounter in Narayanpur district of Chhattisgarh. In this, one security force soldier also died.
01:14 PM Jun 15, 2024 IST | Chella
8 நக்சல்கள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை     பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம்     சத்தீஸ்கரில் பரபரப்பு
Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.

Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவலின்பேரில் அப்பகுதியில் 4 மாவட்டங்களில் போலீஸார் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், நக்கல்களுக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 நக்கல்களைப் பாதுகாப்புப் படையினர் என்கவுண்டர் செய்தனர். மேலும், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுக்மா, தந்தேவாடா, நாராயண்பூர், கான்கேர் ஆகிய 4 மாவட்டங்களில் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அங்குத் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.

Read More : ‘இது ஒரு வித்தியாசமான நகரமா இருக்கே’..!! ’நீங்க இந்த இடத்துக்கு போயிருக்கீங்களா’..? அப்படி என்ன ஸ்பெஷல்..?

Tags :
Advertisement