For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

8 மாத விண்வெளி பயணம்!. பத்திரமாக பூமிக்கு திரும்பிய 4 வீரர்கள்!. மருத்துவமனையில் சிகிச்சை!

8 months of space travel! 4 soldiers who returned to earth safely! Hospital treatment!
08:14 AM Oct 26, 2024 IST | Kokila
8 மாத விண்வெளி பயணம்   பத்திரமாக பூமிக்கு திரும்பிய 4 வீரர்கள்   மருத்துவமனையில் சிகிச்சை
Advertisement

NASA: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டொமினிக், மைக்கேல் பாரட் மற்றும் ஜீனெட் எப்ஸ், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இந்த 4 பேரும் தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு கடந்த 2 மாதத்துக்கு முன் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.

Advertisement

ஆனால், போயிங் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விண்வெளி வீரர்கள் இன்றி அந்த விண்கலம் கடந்த செப்டம்பரில் பூமி வந்தடைந்தது. தொடர்ந்து, மில்டன் புயலால் மீண்டும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு 8 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர். அவர்களும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ன்னர் அவர்களின் ஆய்வுப் பணி 8 நாட்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது. மேலும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் சமீபத்தில் 2 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், மார்ச் மாதம் விண்வெளிக்குச் சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதத்துக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். மெக்சிகோ வளைகுடாவில் புளோரிடா கடற்கரை அருகே இன்று அதிகாலை அவர்களது விண்கலம் பாராசூட் உதவியுடன் கடலில் விழுந்தது. அதன்பின், விண்வெளி வீரர்கள் படகுகள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Readmore: பூகம்பத்தின் சகுனமா?. ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட ராட்சத  ‘Doomsday மீன்’!.

Tags :
Advertisement